என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
இப் பாவிக்கு தகுதி இல்லையே
என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
இவ் ஏழைக்கு தகுதி இல்லையே

என் பெலவீனமறிந்தும் நீர் நேசித்தீர்
என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர் --- என்னில்

1. உம்மை விட்டு விலகும் செயல் செய்த நாள் உண்டு
உம்மை காயப்படுத்தும் வார்த்தை சொன்ன நாள் உண்டு
பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான் --- என்னில்

2. பாவச் சேற்றில் கிடந்த ஓர் பாவி நான் ஐயா
உந்தன் அன்பின் கயிற்றால் என்னை இழுத்தீரே
உம் நேசம் போல் ஒன்றும் எங்கும் இல்லையே --- என்னில்