கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே
கர்த்தா உம் பாடுகள் நித்தமும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே

1. கெத்சமனே பூங்காவிலே
கதறி அழும் ஓசை
எத்திசை அந்தோ தொனிக்கின்றதே
எந்தன் மனம் திகைக்கின்றதே
கண்கள் கலங்கிடுதே

2. சிலுவையில் மாட்டி வதைத்தனரோ
உம்மை செந்நிறமாக்கினரோ
அப்போது அவர்க்காய் வேண்டினீரே
அன்போடு அவர்களைக் கண்டீரன்றோ
அப்பா உம் அன்பு பெரிதே

3. என்னையும் உம்மைப்போல் மாற்றிடவே
உம் ஜீவன் தந்தீரன்றோ
என் தலை தரை மட்டும் தாழ்த்துகின்றேன்
தந்துவிட்டேன் அன்பு கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும்