என்மீது அன்புகூா்ந்து
பலியானீா் சிலுவையிலே
எனக்காய் இரத்தம் சிந்தி
கழுவினீா் குற்றம் நீங்க

பிரித்தெடுத்தீா் பிறக்கும் முன்னால்
உமக்கென்று வாழ்ந்திட

ஆராதனை உமக்கே அனுதினமும் உமக்கே

1. பிதாவான என் தேவனே தகப்பனே என் தந்தையே
மாட்சிமையும் மகத்துவமும் உமக்குத்தானே என்றென்றைக்கும்

வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே

2. உம் இரத்தத்தால் பிதாவோடு ஒப்புரவாக்கி மகிழச் செய்தீர்
கறைபடாத மகனா(ளா)க நிறுத்தி தினம் பாா்க்கின்றீா்

வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே

3. மாம்சமான திரையை அன்று கிழித்து புது வழி திறந்தீா்
மகா மகா பரிசுத்த உம் திருச்சமுகம் நுழையச் செய்தீா்

வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே

4. உம் சமூகம் நிறுத்தினீரே உமது சித்தம் நான் செய்திட
அரசராக குருவாக ஏற்படுத்தினீா் ஊழியம் செய்ய

வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே