அல்லேலூயா (3) - 2

வாக்கு மாறா தெய்வமே
உம் வார்த்தை ஒன்றே போதுமே
இந்த ஆண்டின் நன்மைகள்
என்னை வந்து சேருமே
அல்லேலூயா (3) - 2

1. உம் நீதியின் பாதைகளில் அனுதினம் வழிநடத்தி
என்னை காக்கின்றீர் முன் செல்கின்றீர் - அல்லேலூயா
நிறைவேறா வாக்குகள் என் வாழ்வில் நிறைவேறும்
உம் வார்த்தையில் பொய் இல்லையே என்றென்றுமே --- வாக்கு

2. அற்புதம் அதிசயங்கள் என் வாழ்க்கையில் நிறைவேற
நீர் எந்தன் மேய்ப்பராய் இருக்கின்றீர்
வானத்தின் பலகணிகள் திறக்கவே செய்திடுவீர்
உம் மேன்மையால் என் களஞ்சியம் செழிப்பாகுமே --- வாக்கு

3. எத்தனை ஆயுதங்கள் என்னை நோக்கி வந்தாலும்
எப்போதும் விலகாமல் நீர் காத்தீரே
எண்ணில்லா நன்மைகள் என் வாழ்வில் செய்திட்டீர்
அதை நினைத்து நான் உம்மை துதித்திட மனம் தந்தீரே --- வாக்கு