அபிஷேக ஒலிவ மரம்
உம் ஆலயத்தில் நடப்பட்டவன்
உம் சமூகத்தில் வாழ்கின்றவன்
உம் அன்பையே நம்புவன் - நானும்

1. உம் வசனம் தான் பசியாற்றும் உணவு
உம் பிரசன்னம் தான் தாகம் தீர்க்கும் தண்ணீர்
நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர்
நீரே என் ஜீவனின் பெலனானீர் - நானும்

2. என்னைக் காப்பாற்றும் காவலர் நீரே
அயராது நீர் பாய்ச்சுவீரே
என் தேவைகள் யாவையும் சந்திப்பவரே
எந்த சேதமும் இன்றி காப்பவரே - நானும்

3. பெலன் தரும் புகலிடம் நீரே
உம்மில் வேரூன்ற கிருபை செய்தீரே
மலர்ந்திடுவேன் நான் கனி கொடுப்பேன்
உலகமெங்கும் நான் பலன் கொடுப்பேன் - நானும்