ஊற்றப்பட வேண்டுமே, உன்னதத்தின் ஆவி
உயிர்ப்பிக்க வேண்டும், எம்மை தேவா
முன்மாரியாக அன்று பொழிந்திட்ட ஆவியை
பின்மாரியாக இன்று பொழிந்திடுமே - (2)

எண்ணெய் அபிஷேகமே என்தலையை நனைக்க
ஆவியால் நிரப்புமே பாத்திரம் வழிந்தோடும்
நீச்சல் ஆழம் மூழ்கியே நேசர் அன்பில் மகிழ
அக்கினி அபிஷேகம் எந்தன் ஆவல் தீர்த்திடும் --- ஊற்றப்பட

1. தேவ மைந்தன் இயேசுவை விசுவாசித்தோம்
போதிக்கும் ஆவியாலே நிறைத்திடுமே --- எண்ணெய்

2. ஜெப வேண்டுதலிலே தரித்திருப்போம்
ஜெகத்திலே சாட்சியாக எம்மை நிறுத்தும் --- எண்ணெய்

3. ஒருமனதோடு கூடி வந்துள்ளோம்
தேவ புத்திரர் என முத்திரை போடும் --- எண்ணெய்

4. ஜீவ பலியாக எம்மை ஒப்புவிக்கிறோம்
சகல சத்தியத்திலும் எம்மை நடத்தும் --- எண்ணெய்

5. ஆவியின் வரங்களை அருள் செய்யும் தேவா
ஆவியின் கனிகள் என்றும் ஈந்திடவே --- எண்ணெய்