விசுவாசப் பிரமாணம்

வானும் புவியும் வையகமும்
வனைந்த வல்ல பரனான
வானக தந்தையே நம்புகிறேன் (2)

அவரொரே திருமகன் கன்னியிடம்
அனைவரின் நாதர் கிறிஸ்துவுமாய்
அவதரித்ததையும் நம்புகிறேன் (2)

பிலாத்துவின் கீழவர் சிலுவையதில்
பெரும்பாடுகளுடன் இறந்தடங்கி
பெருங்குழி புகுந்ததை நம்புகிறேன் (2)

உயிரோடெழுந்தார் மூன்றாம் நாள்
உயரே எழுந்து பரன் வலமே
உடனிருப்பதையும் நம்புகிறேன் (2)

உயிருள்ளோரும் இறந்தோரும்
உண்மையாம் தீர்ப்பை அடைந்திடவே
உறுதியாய் வருவார் நம்புகிறேன் (2)

தூயாவி தூயோர் சபை உறவு
பாவ மன்னிப்பு உடல் உயிர்ப்பு
மெய் நிலை வாழ்வையும் நம்புகிறேன் (2)