1. பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே
பின்மாரி ஆவியை ஊற்றுமே
மேலான வல்லமை
மேலான தரிசனம்
மேலான வரங்களைத் தாருமே
என்னை நிரப்புமே (2)
என்னை நிரப்பியே அனுப்புமே
என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
உம் ஆவியை ஊற்றுமே
2. அனலான ஊழியம் தாருமே
என்னை அக்கினி ஜீவாலையாய் மாற்றுமே - மேலான
3. நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிட
அற்புதத்தின் அபிஷேகம் தாருமே - மேலான
4. அக்கினி நாவுகள் தாருமே எனக்கு
அதிகார நாவுகள் தாருமே - மேலான