1. கர்த்தரிலும் தம் வல்லமையிலும்
கிருபையாய் யாவரும் பலப்படுவோம்
இந்த நாளிலே சாத்தானை எதிர்த்து நின்று
திராணியோடு போர் புரிவோம்
சர்வாயுத வர்க்கத்தை எடுத்து கொள்வோம்
சாத்தானின் சேனையை முறித்திடுவோம்
அவர் சத்துவ வல்லமையால்
2. மாமிசம் இரத்தத்துடனும் ஆள
துரைத்தனம் அதிகாரம் அந்தகாரத்தின்
லோகாதிபதியோடும் பொல்லா ஆவியோடும்
போராட்டம் நமக்கு உண்டு - சர்வாயுத
3. இரட்சணியமாம் தலையில் சீராவும்
எக்ஷ்ணமும் அணிந்து கொள்வோம்
தேவ வசனமினும் ஆவியின் பட்டயம்
தேவை அதை பிடித்து கொள்வோம் - சர்வாயுத