கலங்கிடாதே நீ திகைத்திடாதே
நான் காக்கும் தேவன் என்றாரே (2) கலங்கிடாதே....
1. மனிதர்கள் அன்பு மறைந்து போனாலும்
மானிலத்தோர் உன்னை மறந்து போனாலும் - (2)
மலைகள் விலகி அகன்று போனாலும்
மாறிடாதோர் உந்தன் ஆதாரம் நானே - (2)
அலைகள் மோதி படகு அசைந்தால்
அமைதி தரவே வந்திடுவீர் அமைதி தரவே வந்திடுவீர்
2. கவலையால் உள்ளம் கலங்கி போனாலும்
கண்ணீர் உந்தன் உணவானாலும் - (2)
கஷ்டங்கள் உன்னை சூழ்ந்து கொண்டாலும்
கரம் பிடித்தே உன்னை நடத்திடுவேனே - (2)
அலைகள் மோதி படகு அசைந்தால்
அமைதி தரவே வந்திடுவீர் அமைதி தரவே வந்திடுவீர்
3. உந்தனின் கண்ணீர் துருத்தியை கண்டேன்
உனக்காகவே மனம் உருகியே நின்றேன் - (2)
உந்தனை எந்தன் கரமதில் வரைந்து
உனக்காக யாவையும் செய்து முடிப்பேன் - (2)
அலைகள் மோதி படகு அசைந்தால்
அமைதி தரவே வந்திடுவீர் அமைதி தரவே வந்திடுவீர்