நன்றியோடு நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு ராஜனே
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
உமக்கே நன்றி கூறுவேன் நான்

1. எண்ணடங்கா நன்மைகள் யாவையும்
எந்தன் வாழ்வில் செய்தவரே
நினைக்காத நன்மைகள் அளிப்பவரே
உமக்கென்றுமே துதியே

2. சத்ய தெய்வத்தின் ஏக மைந்தனே
விசுவாசிப்பேன் உம்மையே
வரும் காலம் முழுவதும் உம் கிருபை
நன்மையும் என்னை தொடருமே

3. முழங்கால்கள் யாவும் முடங்குமே
உந்தன் திவ்ய பிரசன்னத்தினால்
முற்று முடியா என்னையும் காப்பவரே
உமக்கென்றுமே துதியே

4. கலங்காதே திகையாதே என்றவரே
என்னை காத்து நடத்திடுவீர்
கண்மணி போல் என்னையும் காப்பவரே
கரை சேர்த்திட வந்திடுவீர்