அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்பு
ஆண்டவர் நம்மேல் வைத்த மெய் அன்பு
தேவ ரகசியங்களை அறியும்
தீர்க்கதரிசியாய் இருந்தாலும்
1. பல பல பாஷைகள் பேசும்
மலை பெயர்க்கும் மா விசுவாசம்
சகல ஞான அறிவும் சிறிது
சகோதர அன்பே பெரிது
2. தன் பொருள் ஈந்தளித்தாலும்
தன் சரீரம் சுடக் கொடுத்தாலும்
தான தர்மம் யாவும் சிறிது
தமையனின் அன்பே பெரிது
3. சாந்தம் சகல தயவுள்ளது
தாங்கும் தேவ தயவு பெற்றது
புகழ் இறுமாப்பு பொறாமை
பகை நியாய பாவம் செய்யாது
4. அன்பில்லாதார் தேவனை அறியார்
தேவன் அன்பாக இருக்கிறார்
அன்பில் ஏதும் பயமே இல்லை
அன்பு என்றும் ஒழிவதும் இல்லை
5. விசுவாசம் நம்பிக்கை அன்பு
இம்மூன்றும் நிலைத்திருக்கிறது
இவைகளில் அன்பே பெரிது
இதை உலகில் காண்பதும் அரிது