வழி நடத்தும் வல்ல தேவன் வாழ்வில் நாயகனே
வாழ்வில் நாயகனே - நம்
தாழ்வில் நாயகனே
1. போகும் வழியைக் காட்டி நல்ல
போதனை செய்வார் – ஏகும் சுத்தர்
மீது கண்கள் இருத்தி நடத்துவார்
இயேசு திருத்தி நடத்துவார்
2. வாதை நோய்கள் வன்துன்பங்கள்
வருத்திய போதும் – பாதையில்
நாம் சோர்ந்திடாமல் பலப்படுத்திடுவார்
இயேசு திடப்படுத்திடுவார்
3. காடானாலும் மேடானாலும் கடந்து
சென்றிடுவோம் – பாடானாலும்
பாடிச் செல்வோம் பரவசமுடனே
இயேசு பரன் தான் நம்முடனே