சிலுவை சுமந்து வந்தோம்
சிலுவை வீரர் நாங்கள்
சிலுவையல்லாது மீட்பு இல்லை
சிலுவையே எங்கள் மேன்மை
சிலுவை எங்கள் சின்னம்
சிலுவை எங்கள் பாதை
சிலுவை எங்கள் ஜீவன்
சிலுவை எங்கள் மேன்மை
1. பாவத்தை சுமந்தோம் மகிழ்வில்லை
சாபத்தால் நெஞ்சில் நிறைவில்லை
எங்கள் பாவங்கள் போக்கிடவே
கல்வாரி சிலுவையில் ஜீவன் தந்தாரே
2. லோகத்தை வெறுத்து பின் செல்வோம்
ஊழியம் எங்கள் பணியென்போம்
சோதனை யாவையும் ஜெயித்திடுவோம்
சிலுவையை தினமும் சுமந்து செல்வோம்
3. சோகத்தை மறந்து மகிழ்வோம்
தேவனை கொண்டு சாதிப்போம்
எண்களின் அன்பினை காட்டிடவே
இயேசுவின் அன்பின் சின்னம் ஆனோமே