உனக்காய் மரித்தேன்
ஆனாலும் சதா காலம்
உயிரோடெழுந்தேன் இதோ
ஜீவிக்கிறேன் என்றாரே – இயேசு (2)

சீயோனே! கெம்பீரி!
சாலேமே! நீ ஸ்தோத்தரி
துதியே கனமே மகிமை செலுத்து(2)
என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்!
ஆமென் அல்லேலூயா! (2)

1. வாக்கு மாறாதவரே இயேசு
சொல் தவறாதவரே
சொன்னபடி அன்று
உயிர்த்தெழுந்தாரே --- சீயோனே

2. அன்றாடகம் என்னுடன் - பேசி
அன்பாய் விசாரிக்கின்றார்
என்னோடு ஜீவிக்க இயேசு
உயிர்த்தாரே --- சீயோனே

3. சுத்த திருச்சபையே பறை
சாற்றிடு நற்செய்தியை
சாவையும், பேயையும், நோயையும்
ஜெயித்தார் --- சீயோனே

3. நம்பிக்கையுள்ள வல்ல – ஜீவ
நல்ல மார்க்கமிதுவே
நாமும் உயிர்த்து நம் கர்த்தரைச்
சேருவோம் --- சீயோனே