என்னைக் காண்கின்ற தேவனை கருத்தோடு தேடுவேன்
காலமெல்லாம் கண்மணிப் போல் உறங்காமல் காப்பவரை – (2)
1. என் மீது கண் வைத்து ஆலோசனை சொல்லுகிறீர்
உம் நல்ல வார்த்தையை...
உம் நல்ல வார்த்தையை தினமும் எனக்குத் தந்து
தவறாமல் என்னை நடத்துகிறீர் –-- என்னைக்
2. உன்னதமானவரின் நிழலில் தங்கிடுவேன்
வேடனின் கண்ணிக்கும்...
வேடனின் கண்ணிக்கும் பாழாக்கும் கொள்ளைநோய்க்கும்
விடுவிக்கும் தேவன் நீரல்லவோ –-- என்னைக்
3. உம்மண்டை காத்திருந்து புதுபெலன் அடைந்திடுவேன்
கழுகுகளைப் போல…
கழுகுகளைப் போல செட்டைகளை விரித்து
உயரே பறந்து எழும்பிடுவேன் –-- என்னைக்