நன்றி நிறைந்த உள்ளத்தோடே (4)
பாடித் துதித்திடுவேன் பரவசம் ஆகிடுவேன்
பாடித் துதிப்பேன் இயேசுவை

1. நீர் செய்த நன்மைகள் ஏராளம்
அதை எண்ணவே முடியாதையா
ஒவ்வொரு நாட்களிலும் வலக்கரம் பிடித்தென்னை
தாங்கி நடத்தி வந்தீர்

2. சோர்வான நேரத்தில் என்னை அழைத்து
உங்க மார்போடு அணைத்தீரையா
கலங்காதே திகையாதே நான் உன் தேவன் என்று
தைரியப்படுத்தினீரே