எனக்காய் யார் போவார்
பாடுகள் எனக்காய் யார் சகிப்பார்
திறப்பின் வாசலில் நிற்பவன் யார்
என்றேசு அழைக்கின்றார் உன்னை
1. புத்தியுள்ள கன்னிகை போல்
விழித்திடு விசுவாசியே
அழியும் ஜனம் மீட்கப்பட
ஜெபித்திடு விசுவாசியே ( என்றும் )
2. புல்லுள்ள இடங்களிலே
மேய்ச்சல் காட்டிடுவார்
ஆத்துமாவை தினம் தேற்றி
ஆறுதல் படுத்திடுவார் ( உன்னை )
3. கன்னியர் வாலிபரே
கர்த்தருக்காய் புறப்படுங்கள்
வருத்தப்பட்டு சுமை சுமப்போரை
அவரண்டை வந்திடுங்கள் ( மேய்ப்பன் )