துதி துதி என் மனமே
துதிகட்குள் வசிப்பவரை
எல்லா நாட்களும் செய்திடும்
நன்மைகளை நினைத்து
நன்றியுடன் பாடு மனமே - அல்லேலுயா
நன்றியுடன் பாடு மனமே
1. அன்னையைப் போல அவர்
என்னை அரவணைத்தாற்றிடுவார்
அவர் அன்புள்ள மார்பதனில் - நான்
இன்பமாக இளைப்பாறுவேன் – நான் --- துதி
2. சகாய பர்வதமே வல்ல
கோட்டையும் அரணுமாமே
ஏதும் பயமொன்றும் வேண்டாமென்றால்
எந்தசேதமின்றி காக்கவல்லோ --- துதி
3. சிங்கமோ விரியன் பாம்போ
பால சிங்கமோ வலு சர்ப்பமோ
அதன் தலையதை நசுக்கிடவே
தக்கபெலன் தருபவரே --- துதி