என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு - என்னை

1. நான் எந்த நிலைமையில் இருந்தாலும்
நான் மனரம்மியமாய் இருக்கின்றேன்
பட்டினியாய் இருந்தாலும் பரிபூரண மடைந்தாலும்
தாழ்ந்திருக்கவும் வாழ்ந்திருக்கவும்
போதிக்கப்பட்டேன் - நான்

2. என் தேவன் யெகோவோ யீரே
என் தேவை யாவையும் தருவாரே
தமது ஜசுவரியத்தின்படியே எனது குறைவை நிறைவாக்கும்
இயேசுவை விசுவாசித்தே தேவ
மகிமையைக் காண்பேன் - நான்

3. நான் சோம்பலின் அப்பம் புசியாமல்
நான் சோர்ந்து தரித்திரம் அடையாமல்
உற்சாகமாக உழைத்திடுவேன் உண்மை ஊழியம் செய்திடுவேன்
தேவனை அதிகாலை தோறும்
தேடிக் கண்டடைவேன்- என்

4. நான் கர்த்தருக்குக் காத்திருந்தே
நான் புதுப்பெலனை அடைந்திடுவேன்
கழுகுபோல செட்டைகளை அடித்து நான் எழும்பிடுவேன்
நடந்திட்டாலும் ஒடினாலும்
சோர்ந்திட மாட்டேன் - நான்

5. என் இயேசு சீக்கிரம் வருவாரே
நான் அவருக்காகவே காத்திருப்பேன்
அவனவன் கிரியைப்படியே அவர் அருளும் பிரதிபலனே
ஆண்டவர் வரும்போது தம்முடன்
கொண்டு வருவாரே - இயேசு