பாடுகிறேன் நான் பாடுகிறேன்

பாடுகிறேன் நான் பாடுகிறேன்
இயேசென்னை நேசித்ததால்
அல்லேலூயா நான் பாடுகிறேன்
அவரென்னை இரட்சித்ததால்

1. எனக்கொன்று தேவை என்று உணர்ந்தேன்
எனக்குள் சமாதானம் இல்லை என்றறிந்தேன்
என் பாவத்தோடு நான் இயேசுவிடம் வந்தேன்
என் பாவம் மன்னித்தார் என்னென்று சொல்வேன்

2. பட்டம் பதவி பணமும் தராத
பரிசுத்த ஜீவியம் என் இயேசு தந்தார்
கேட்டிடு என் ஜீவ வார்த்தை என்றாரே
கீழ்படிந்தேன் எந்தன் உள்ளம் பொங்குதே

3. அதிகாலை தோறும் என் உள்ளத்தை அன்பால்
அதிகமதிகமாய் நிரப்பி வாராரே
தினந்தோறும் புதிதாக கிருபைஅளித்து
தினந்தோறும் அதிசயம் காணச் செய்கின்றார்

4. நேசிக்கச் சிறந்ததோர் இயேசென்று அறிந்தேன்
வாசிக்க சிறந்ததோர் புத்தகம் பெற்றேன்
நேசித்து வாசித்துப்பாடி மகிழ்வேன்
நேசரின் அன்பை நான் உலகெங்கும் சொல்வேன்