பாவிக்கு நேசராரே இயேசு மானுவேலரே - இவர்
1. மாசற்ற தேவனார் மைந்தப் பிரதாபரே
இயேசுக் கிறிஸ்தாரே ஆசை மானுவேலரே
2. பிரயாசத் தோரே பாரஞ் சுமந்தபேரே
கிருபை பிதாவாரே இயேசு மானுவேலரே
3. நெரிந்த நாணல் முறியார் பொரிந்த திரியவியார்
நிர்ப்பந்தரைத் தள்ளாரே இயேசு மானுவேலரே
4. கெட்ட குமாரர்க்குக் கிருபைப் பிதாவந்தார்
இட்டப் பிரசாதத்தாரே இயேசு மானுவேலரே
5. சத்துருச் செய்வதென்ன சர்ப்பம் பொரிவதென்ன
இஸ்திரி வித்தார் வந்தாரே இயேசு மானுவேலரே
6. சீயோன் குமாரியரே சிங்காரக் கன்னிமாரே
நாயகன் வந்தாரே இயேசு மானுவேலரே
7. நித்திய விவாகமே நீடிய சிநேகமே
பத்தினி மாதராரே இயேசு மானுவேலரே
8. வேதநாயகன் பாட்டு மேசியாவின் கொண்டாட்டு
சாதிகளின் சீராட்டு இயேசு மானுவேலரே