இயேசுவின் நாமத்தில் ஆனந்திப்பேன்

இயேசுவின் நாமத்தில் ஆனந்திப்பேன்
ஆனந்திப்பேன் ஆனந்திப்பேன்
பூவில் மேலான நல் நாமமதில்
ஆனந்திப்பேன் ஆனந்திப்பேன்

1. வல்லமை நிறைந்த நாமம் இது
தொல்லைகள் நீக்கும் நாமம் இது
பாவத்தில் மாண்டிடும் பாவியைத் தேடிடும்
பாசம் நிறைந்த நல் நாமம் இது நாமம் இது

2. கருணை காட்டிடும் நாமம் இது
கண்ணீர் துடைக்கும் நாமம் இது
வறுமை வியாதிகள் மரண மோசங்கள்
யாவையும் ஆற்றிடும் நாமம் இது நாமம் இது

3. ஊற்றுண்ட பரிமள தைலம் இது
கீலியத்தின் பிசின் தைலம் இது
ஆறுதல் தந்திடும் தேற்றி அணைத்திடும்
அன்பன் இயேசுவின் நல் நாமம் இது நாமம் இது