பாடுகிறேன் நான் பாடுகிறேன்

பாடுகிறேன் நான் பாடுகிறேன்
இயேசென்னை நேசித்ததால்
அல்லேலூயா நான் பாடுகிறேன்
அவரென்னை இரட்சித்ததால்

1. எனக்கொன்று தேவை என்று உண்ர்ந்தேன்
என் உள்ளில் சமாதானம் இல்லை என்றறிந்தேன்
என் பாவத்தோடு நான் இயேசண்டை வந்தேன்
என் பாவம் மன்னித்தார் என்னென்று சொல்வேன்

2. பட்டம் பதவி பணமும் தராத
பரிசுத்த ஜீவியம் என் இயேசு தந்தார்
கேட்டிடு என் ஜீவ வார்த்தை என்றாரே
கீழ்ப்படிந்தேன் எந்தன் உள்ளம் பொங்குதே

3. நேசிக்கச் சிறந்ததோர் இயேசென்று அறிந்தேன்
வாசிக்க சிறந்ததோர் புத்தகம் பெற்றேன்
நேசித்து வாசித்துப் பாடி மகிழ்வேன்
நேசரின் அன்பை நான் என்னென்று சொல்வேன்