கனியே கர்த்தர் விரும்பும் மதுரக்கனியே
காணவே அன்பால் உன்னை தேடி வாராரே (2)
1. பூத்து மலரும் பூவல்ல
பூவையர் விரும்பும் பூவல்ல
மாந்தர் விரும்பும் பூவல்ல
மகிமை இயேசு விரும்பும் அன்பு
2. ஜாதி விலகிடும் தோஷமல்ல
அது சாத்தானால் வரும் தோஷமல்ல
மக்களால் உண்டாகும் தோஷமல்ல
அது மகிபன் விரும்பும் சந்தோஷம்
3. சாத்திரம் காட்டும் தானமல்ல
அது சத்திரம் கட்டிடும் தானமல்ல
மாந்தர்கள் செய்திடும் தானமல்ல
நம் மகிபர் விரும்பும் சமாதானம்
4. புத்தகம் எழுதும் மையல்ல
பூவையர் தீட்டிடும் மையல்ல
மாந்தரை மயக்கும் மையல்ல
மா கோபத்தில் காட்டிடும் பொறுமை
5. இத்தரையோர் காட்டும் இரக்கமல்ல
ஏழைக்கு இரங்கும் இரக்கமல்ல
பெருமையில் காட்டும் இரக்கமல்ல
நம் பிரியர் விரும்பும் தயவு
6. நாவலர் பழக்கும் குணமல்ல
நல்லோராய் நடக்கும் குணமல்ல
சன்மார்க்கம் என்ற குணமல்ல
சத்தியத்தில் நிற்கும் நற்குணம்
7. பூக்களில் உண்டாகும் வாசமல்ல
புது சேர்க்கையில் உண்டாகும் வாசமல்ல
பன்னீரால் உண்டாகும் வாசமல்ல
பரன் இயேசுவில் வைக்கும் விசுவாசம்
8. சாவில் விளங்கும் சாந்தமல்ல
சத்தத்தை அடக்கும் சாந்தமல்ல
சாந்த சொரூபி இயேசு நுகத்தில்
சாய்ந்து சுமக்கும் சாந்தம்
9. அமர்ந்திருப்பதடக்கமல்ல
அலகை வெறுப்படதடக்கமல்ல
உலக இச்சைக்கு ஓடி விலகி
உன்னதரை சேரும் இச்சை அடக்கம்