இம்மானுவேல் இம்மானுவேல்

இம்மானுவேல் இம்மானுவேல்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே

பெத்லகேமில் பிறந்த அவர்
பாலகனாய் ஜெனித்த அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
உலகத்தின் ராஜா அவர்
தூதர் போற்றும் தேவன் அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே

இம்மானுவேல் இம்மானுவேல்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே

பெத்தலையில் முன்னனையில்
தாழ்மையின் கோலமாய் வந்துதித்தார்
ஏழையாம் மேய்ப்பர்கள் தேடி வந்து
பணிந்தார்கள் இயேசு பாலனையே

ஒன்றாய் சேர்ந்து பாடிடுவோம்
நம் இயேசுவை கொண்டாடுவோம்
ஒன்றாய் சேர்ந்து பாடிடுவோம்
நம்மேசு பிறந்தார் கொண்டாடுவோம்

விண்ணில் ஒரு நட்சத்திரம் போகிறதே
இரட்சகரை தேடி இன்பமுடன்
பாதை காட்டி செல்கின்றதே
நம்மை இயேசுவிடம் சேர்க்கின்றதே

ஒன்றாய் சேர்ந்து பாடிடுவோம்
நம் இயேசுவை கொண்டாடுவோம்
ஒன்றாய் சேர்ந்து பாடிடுவோம்
நம்மேசு பிறந்தார் கொண்டாடுவோம்