பாவத்தின் பாரத்தினால்

1. பாவத்தின் பாரத்தினால்
தவித்திடும் பாவி என்னை
நின் கிருபை பிரவாகத்தால்
தேற்றிடும் ஏசு நாதா

2. கெட்ட குமாரனைப் போல்
துஷ்டனாய் அலைந்தேன் அப்பா
நின் அன்பை உணராமல்
துரோகம் நான் செய்தேனே

3. கள்ளனாயினும் நான்
நீர் பெற்ற பிள்ளை அல்லோ
கள்ளனுக்கருள் செய்த நீ
தள்ளாதே சிலுவை நாதா

4. பாவி மரியாளையும்
நன்றியற்ற பேதுருவையும்
அருள் செய்த ஆண்டவனே
கிருபைகூர் என் ஐயனே

5. உம்மோடு வருடங்களாய்
உணவுண்ட யூதாசை போல்
கறையற்ற தந்தையும்மை
வஞ்சித்தேன் இயேசு நாதா

6. தந்தையை விட்ட பின்பு
தவிடு தான் ஆகாரமோ
மனம் கசிந்து நொந்தேன்
கண்ணீரை துடைத்திடுமே

7. அறையுண்ட சிலுவையினின்று
அணைத்திட வாருமையா
நின்பாதம் விழுந்தேனையா
சமாதானம் தாருமையா

8. தந்தை தாய் தாமரெல்லாம்
என்னைக் கைவிடுவார்கள்
சாகும் நாளில் தாங்குவார்
நீர் அல்லால் யாருமில்லை