காக்கும் கரங்கள் உண்டெனக்கு

காக்கும் கரங்கள் உண்டெனக்கு
காத்திடுவார் கிருபையாலே
அல்லேலூயா பாடிப்பாடி
அலைகளை நான் தாண்டிடுவேன்

நம்புவேன் இயேசுவை நம்புவேன் இயேசுவை

1. நிந்தனைகள் போராட்டம் வந்தும்
நீதியின் தேவன் தாங்கினாரே
நேசக்கொடி என் மேல் பறக்க
நேசருக்காய் ஜீவித்திடுவேன் --- நம்புவேன்

2. கன்மலைகள் பெயர்க்கும் படியாய்
கர்த்தர் உன்னைக் கரம் பிடித்தார்
காத்திருந்து பெலன் அடைந்து
கழுகு போலே எழும்பிடுவாய் --- நம்புவேன்

3. அத்திமரம் துளிர்விடாமல்
ஆட்டுமந்தை முதலற்றாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர்
வெட்கப்பட்டுப் போவதில்லை --- நம்புவேன்