1. மோட்ச யாத்திரை செல்கின்றோம் மேலோகவாசிகள் - இம் மாய லோகம் தாண்டியே எம் வீடு தோன்றுதே கடந்து செல்கின்றோம் கரையின் ஓரமே காத்திருந்த ராஜ்ஜியம் கண்டடைவோம்
ஆனந்தமே ஆ ஆனந்தமே ஆண்டவருடன் நாம் என்றும் ஆளுவோம் ஆதி முற்பிதாக்களோடு தூதருமாய் ஆர்ப்பரிப்புடன் கூடி வாழுவோம்
2. சத்திய சுவிசேஷம் எடுத்துரைத்துமே - தம் நித்திய இராஜ்ஜியம் மக்களை ஆயத்தமாக்கவே தேசமெங்குமே அலைந்து செல்கிறோம் நேசர் இயேசு வாக்குரைகள் நம்பியே --- ஆனந்தமே 3. அள்ளித் தூவிடும்விதை சுமந்து செல்கின்றோம் தம் அண்ணல் இயேசுவின் சமூகம் முன்னே செல்லுதே கண்ணீர் யாவுமே கடைசி நாளிலே கர்த்தரே துடைத்து எம்மைத் தேற்றுவார் --- ஆனந்தமே 4. கர்த்தர் எம் அடைக்கலம் கவலை இல்லையே - இக் கட்டு துன்ப நேரமோ கலக்கமில்லையே கஷ்டம் நீக்குவார் கவலை போக்குவார் கைவிடாமல் நித்தமும் நடத்துவார் --- ஆனந்தமே