மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு - மங்கள வாழ்வு மருவிய சோபன சுப வாழ்வு
1. துணை பிரியாது, தோகையிம்மாது துப மண மகளிவர் இதுபோது மனமுறை யோது வசனம் விடாது வந்தன ருமதருள் பெறவேது - நல்ல --- மண 2. ஜீவ தயாகரா, சிருஷ்டியதிகாரா தெய்வீக மாமண வலங்காரா, தேவகுமாரா, திருவெல்லையூரா சேர்ந்தவர்க்கருள் தரா திருப்பீரா? - நல்ல --- மண 3. குடித்தன வீரம், குணமுள்ள தாரம் கொடுத்துக் கொண்டாலது சமுசாரம் அடக்கமாசாரம், அன்பு, உதாரம் அம்புவி தனில் மனைக்கலங்காரம் - நல்ல --- மண 4. மன்றல் செய் தேவி, மணாளனுக்காவி மந்திரம் அவர் குறையுமே தாவி மன்றியிப் புவி யமர்ந்த சஞ்சீவி அவளையில்லாதவ னொரு பாவி - நல்ல --- மண