கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்
கை கொட்டிப் பாடிடுவோம்
இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் - அல்லேலூயா
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் - ஆ! ஆ!
1. பார் அதோ கல்லறை மூடினப் பெருங்கல்
புரண்டுருண்டோடுது பார் - அங்கு
போட்ட முத்திரை காவல் நிற்குமோ
தேவ புத்திரர் சந்நிதிமுன் - ஆ! ஆ!
2. வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்
ஓடி உரைத்திடுவோம் - தாம்
கூறின மாமறை விட்டனர் கல்லறை
போங்கள் கலிலேயாவுக்கு - ஆ! ஆ!
3. அன்னா காய்பா ஆசாரியர் சங்கம்
அதிரடி கொள்ளுகின்றார் - இன்னா
பூத கணங்கள் இடி ஒலி கண்டு
பயந்து நடுங்குகின்றார் - ஆ! ஆ!
4. வாசல் நிலைகளை உயர்த்தி நடப்போம்
வருகின்றார் ஜெய வீரன் - நாமம்
மேள வாத்தியம் கைமணி பூரிகை
எடுத்து முழங்கிடுவோம் – ஆ! ஆ!