தேவ கிருபை ஆசீர்வாதம்
தினமும் எங்களில் பெருகிட
1. ஆவலாயும தோய்வு நாளில்
ஆலயந்தனில் பணிந்து புகழ
பாவ அறிக்கை செய்யும் ஜனங்கள்
பரனின் கிருபை பெற்று மகிழ
2. ஆவலாய் எங்கள் ஆண் குழந்தைகள்
அழகான இள மரங்கள் போலவும்
பாவையர்களாம் பெண் குழந்தைகள்
பலத்த சித்திர அரண்கள் போலவும்
3. எங்கள் பண்டக சாலை சகல
இன்ப வஸ்துக்கள் நிறைந்திருக்கவும்
பங்க வலசை பகலின் கூக்குரல்
பதியில் என்று மில்லாதிருக்கவும்
4. எங்கள் மாடுகள் பலத்திருக்கவும்
இடுக்கணுள்ளே வராதிருக்கவும்
எங்கள் ஆடுகள் கிராமங்களிலே
லட்சங் கோடியாய்ப் பெருகி வரவும்
5. ஆலயந்தனில் உமது வசனம்
அறிவிக்கும் போதக ரனைவருக்குள்ளும்
வேலை ஓய்ந்து பணியும் சபையார்
விரும்பிப் படிக்கும் சகலருக்குள்ளும்
6. இத்தன்மையுடன் இருக்கும் ஜனங்கள்
இவர்கள் தாமென உலகம் சொல்லவும்
கர்த்தர் தெய்வமென் றிருக்கும் பாக்கியம்
கண்ட ஜனமென் றெம்மைச் சொல்லவும்
7. உன்னதங்களின் இருக்கும் தெய்வத்தின்
உயர்ந்த நாமம் மகிமைப்படவும்
இந்நிலம் சமாதானம் பெற்றிட
இஷ்டம் மானிடர் மேலுண்டாகவும்
8. இந்த வீட்டுக்குச் சமாதானம்
இன்ப சுகங்கள் அனைத்துண்டாகவும்
சந்ததியாய் நீடூழி வாழவும்
சபை யனைவரும் துதித்திப் பாடவும்