ஆதாரம் நீர் தான் ஐயா காலங்கள் மாற, கவலைகள் தீற காரணம் நீர் தான் ஐயா
1. உலகத்தில் என்னென்ன ஜெயங்கள் கண்டேன் நான் இந்நாள் வரை ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை குழப்பங்கள் நிறைகின்றன, என் நிலை மாற --- ஆதாரம் 2. குடும்பத்தில் குழப்பங்கள் இல்லை பணக்கஷ்டம் ஒன்றுமே இல்லை ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை அமைதி தான் கலைகின்றது, என் நிலை மாற --- ஆதாரம் 3. உந்தனின் சாட்சியாய் வாழ உள்ளத்தில் வெகு நாளாய் ஆசை உம்மிடம் வந்தேன் உள்ளத்தை தந்தேன் சாட்சியாய் வாழ்ந்திடுவேன், என் நிலை மாற --- ஆதாரம்