ஆராரோ பாடுங்கள்

ஆராரோ பாடுங்கள் அகிலமெல்லாம் கூறுங்கள்
ஆதவன் இயேசு பிறந்தாரென்று

அல்லேலூயா பாடிடுங்கள் - (4)

1. அன்னை மரியின் சின்னப் பிள்ளை
அன்பு பிதாவின் செல்லப்பிள்ளை
தீர்க்கர் வாக்கின் நிறைவே இயேசு
வழியும், சத்தியமும், ஜீவனும் இயேசு --- அல்லேலூயா

2. முன்னணையில் தவழ்ந்த இரட்சகரே
எண்ணற்றோர் இதயத்தில் வாழ்பவரே
கண்மணி போல காப்பவரே
காலமெல்லாம் வாழும் நித்தியரும் நீரே --- அல்லேலூயா