சாரோனின் ரோஜாவே

பல்லவி

சாரோனின் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலியே
உள்ளத்தின் நேசமே
இயேசு என் பிரியமே

சரணங்கள்

1. ஆத்தும நேசரே
உம் நேசம் இன்பமே
பூரண ரூபமே
பழுதொன்றும் இல்லையே --- சாரோனின்

2. வருவேன் என்றுரைத்தவர்
சீக்கிரம் வருகிறார்
வாக்கு மாறாதவர்
தாமதம் செய்யாரே --- சாரோனின்

3. அன்பரை சந்திக்க
ஆயத்தமாகுவோம்
கர்த்தரின் கரமதில்
நம்மை தந்திடுவோம் --- சாரோனின்