மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு
மங்கள வாழ்வு வாழ்வினில் வாழ்வு
மருவிய சோபன சுப வாழ்வு
1. துணை பிரியாது, தோகையிம்மாது
சுப மண மகளிவர் இதுபோது
மனமுறை யோது வசனம் விடாது
வந்தனர் உமதருள் பெறவேது - நல்ல
2. ஜீவ தயாகரா, சிருஷ்டியதிகாரா
தெய்வீக மாமண அலங்காரா
தேவ குமாரா திருவெல்லைய்யூரா
சோந்தவர்க்கருள் தரா திருப்பீரா? - நல்ல
3. குடித்தன வீரம், குணமுள்ள தாரம்
கொடுத்துக் கொண்டாலது சமுசாரம்
அடக்கமாசாரம், அன்பு, உதாரம்
அம்புவி தனில் மனைக்கலங்காரம் - நல்ல
4. மன்றல் செய் தேவி, மணாளனுக்காவி
மந்திரம் அவர் குறையுமே தாவி
மன்றியிப் புவி யமர்ந்த சஞ்சீவி
அவளையில்லாதவ னொரு பாவி - நல்ல