மகிமையாலே களிகூருங்கள்
அவர் துதிகளை சொல்லிப் பாடுங்கள்

கிருபை என்றுமுள்ளது கிருபை என்றுமுள்ளது
என்று சொல்லி ஆர்ப்பரியுங்கள் - அவர்
கிருபை என்றுமுள்ளது கிருபை என்றுமுள்ளது
என்று சொல்லி ஆர்ப்பரியுங்கள் --- மகிமையாலே

1. யாக்கோபின் குடும்பத்தாரே துதியுங்கள்
ஆரோனின் வீட்டாரே போற்றுங்கள் --- கிருபை

2. தாழ்மையில் நினைத்தவரை துதியுங்கள்
கண்ணோக்கிப் பார்த்தவரை துதியுங்கள் --- கிருபை

3. பாவமெல்லாம் மன்னித்தாரே துதியுங்கள்
வியாதியெல்லாம் மாற்றினாரே துதியுங்கள் --- கிருபை