இயேசு நாமம் ஒன்றை நம்புவீர்
பூலோகத்தாரே
1. இயேசு நாமம் ஒன்றை நம்பும்
ரட்சண்யத்துக் கிதுவே ஸ்தம்பம்
பேசும் வேறே நாமமெல்லாம்
பேருலகை ரட்சிக்காதே
2. பார்த்திபன் தாவீது குல
கோத்திர கன்னிமரிபால்
நேத்திரம் போல உதித்துத்
நேமியின் ரட்சகனாக
3. பூதலத் தஞ்ஞான இருள்
போக்கவே மெஞ்ஞான பெரும்
ஜோதியாய் விளங்கும் நீதி
சூரியன் ஆன மகத்துவ
4. பாவிகளீடேற மோட்ச
பாக்கியம் பெறுவதற்காய்
ஜீவன் விட்டு உயிர்த்தெழுந்து
சேணுலகுக் கேறிச்சென்ற
5. விண்டலத்தவர்கள் சூழ
வெருண்டலகை பதறிவிழ
மண்டலத்தைத் தீர்வை செய்ய
மாமுகில் மீதேறி வரும்