இயேசு நேசிக்கிறார்

இயேசு நேசிக்கிறார் - இயேசு நேசிக்கிறார்
இயேசு என்னையும் நேசிக்க யான் செய்த
தென்ன மாதவமோ!

1. நீசனாமெனைத்தான் இயேசு நேசிக்கிறார்
மாசில்லாத பரன் சுதன்றன் முழு
மனதால் நேசிக்கிறார்

2. பரம தந்தை தந்த பரிசுத்த வேதம்
நரராமீனரை நேசிக்கிறாரென
நவிலல் ஆச்சரியம்

3. நாதனை மறந்து நாட்கழித் துலைந்தும்,
நீதன் இயேசெனை நேசிக்கிறாரெனல்
நித்தம் ஆச்சரியம்

4. ஆசை இயேசுவென்னை அன்பாய் நேசிக்கிறார்
அதை நினைந்தவர் அன்பின் கரத்துளெ
ஆவலாய்ப் பரப்பேன்

5. ராசன் இயேசுவின் மேல் இன்ப கீதஞ் சொலில்
ஈசன் இயேசெனைத் தானெசித்தாரென்ற
இணையில் கீதஞ் சொல்வேன்