ஆனந்தமே! ஜெயா! ஜெயா!

ஆனந்தமே! ஜெயா! ஜெயா!
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்

ஞானரட்சகர் நாதர் நமை - இந்த
நாள்வரை ஞாலமதினில் காத்தார் - புகழ்

1. சங்கு கனம் , வளர் செங்கோலரசிவை
தளராதுள கிறிஸ்தானவராம்,
எங்கள் ரட்சகரேசு நமை - வெகு
இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் - புகழ்

2. முந்து வருடமதனில் மனுடரில் வெகு
மோசகஸ்திகள் தனிலேயுழல,
தந்து நமக்குயிருடையுணவும் - வெகு
தயவுடன் யேசு தற்காத்ததினால் - புகழ்

3. பஞ்சம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகுகொடும்
பாழ் கொள்ளைநோய் விஷதோஷத்திற்கும்,
தஞ்சரட்சகர் தவிர்த்து நமை - இத்,
தரைதனில் குறைதணித் தாற்றியதால் - புகழ்