குருசினில் தொங்கியே

பல்லவி

குருசினில் தொங்கியே குருதியும் வடிய
கொல்கதா மலைதனிலே - நம்
குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி,
கொள்ளாய் கண் கொண்டு

சரணங்கள்

1. சிரசினில் முள்முடி உறுத்திட, அறைந்தே
சிலுவையில் சேர்த்தையோ! - தீயர்
திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்
சேனைத்திரள் சூழ

2. பாதகர் நடுவில் பாவியினேசன்
பாதகன் போல் தொங்க - யூத
பாதகர் பரிகாசங்கள் பண்ணிப்
படுத்திய கொடுமைதனை

3. சந்திர சூரிய சசல வான் சேனைகள்
சகியாமல், நாணுதையோ! - தேவ
சுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால்
துடிக்கா நெஞ்சுண்டோ?

4. ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
இறைவன் விலாவதிலே - அவர்
தீட்டிய திட்சைக் குருதியும் ஜலமும்
திறந்தூறோடுது பார்

5. எருசலேம் மாதே, மறுகி நீயழுது
ஏங்கிப் புலம்பலையோ? - நின்
எருசலையதிபன் இள மணவாளன்
எடுத்த கோல மிதோ?